டெல்லியில் பரபரப்பு – விவசாயிகள் போராட்டத்தில் மேலும் ஒரு விவசாயி தற்கொலை!

புதுடெல்லி (02 ஜன 2021):: விவசாய சட்டத்தை எதிர்த்து காசிப்பூரில் விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியை அடுத்த காசிப்பூரில் உள்ள போராட்ட களத்தில் காஷ்மீர் சிங் என்ற விவசாயி அங்கு அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கழிப்பறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். அவரது உடலுக்கு அருகில் தற்கொலைக் குறிப்பும் கிடைத்துள்ளது. . விவசாயிகள் போராட்டத்தின் போது தற்கொலை செய்து கொண்ட நான்காவது விவசாயி காஷ்மீர் சிங்.

மேலும் கடுமையான குளிர் மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக முப்பத்தேழு விவசாயிகள் ஏற்கனவே இறந்துள்ளனர். இதற்கிடையில், மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் வேலைநிறுத்தம் தீவிரமடையும் என்று விவசாயிகள் சங்கத் தலைவர்கள் தெரிவித்தனர். ஜனவரி 6 முதல் 20 வரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெறும். என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் குடியரசு தினத்தன்று அனைத்து மாநில தலைநகரங்களிலும் டிராக்டர் அணிவகுப்பு நடத்தவும் விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். டெல்லி எல்லையில் போராட்டம் 38 வது நாளாக தொடர்கிறது குறிப்பிடத்தக்கது.

ஹாட் நியூஸ்: