கர்நாடகாவில் கட்டாய மத மாற்ற தடை சட்ட மசோதா சட்டசபையில் இன்று தாக்கல்!

Share this News:

பெங்களூரு (2 டிச 2021): கர்நாடகாவில் கட்டாய மதமாற்றத்திற்கு எதிரான சட்ட மசோதா சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.

புதிய சட்டத்தின்படி, கட்டாயப்படுத்தி, வற்புறுத்தி, பணம் கொடுத்து அல்லது திருமண உறுதிமொழியின் கீழ் மதம் மாறுவது சட்டப்படி குற்றமாகும். அதன்படி கட்டாய மதமாற்றத்திற்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். மதம் மாறியவரின் குடும்பத்தினர் அளிக்கும் புகாரின் அடிப்படையில் காவல்துறை வழக்குப்பதிவு செய்யலாம்.

பொதுவானவரை கட்டாய மதமாற்றம் செய்தால் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ.25,000 வரை அபராதம் விதிக்கப்படும். சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் எஸ்சி/எஸ்டியினரை மதமாற்றம் செய்தால் மூன்று முதல் பத்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும். மதமாற்றத்தை இலக்காகக் கொண்ட திருமணத்தை ரத்து செய்யவும் மசோதா வழிவகை செய்கிறது.

கட்டாய மதமாற்ற தடைச்சட்டம் அமலுக்கு வந்த பிறகு மதம் மாற விரும்புபவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். மதம் மாற கட்டாயப் படுத்தப்படவில்லை என்று மாஜிஸ்திரேட் மற்றும் காவல்துறை கண்டறிந்தால், விண்ணப்பித்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு அவர்கள் மதம் மாற அனுமதிக்கப்படுவார்கள்.


Share this News:

Leave a Reply