முஸ்லிம்களுக்கு எதிரான வகுப்புவாத பேச்சு – ஆயுதப் படை தலைவர்கள் பிரதமர் மற்றும் ஜனாதிபதிக்கு கடிதம்!

Share this News:

புதுடெல்லி (01 ஜன 2022): ஹரித்வாரில் முஸ்லிம்களுக்கு எதிராக சமீபத்தில் நடந்த வகுப்புவாத பேச்சுகளைக் கண்டித்து முன்னாள் ஆயுதப்படை தலைவர்கள் பிரதமர் மற்றும் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இதுகுறித்து எழுதப்பட்டுள்ள அந்த கடிதத்தில் “வெறுப்பின் பொது வெளிப்பாடுகளுடன் வன்முறையைத் தூண்டுவதை நாங்கள் அனுமதிக்க முடியாது, இது உள்நாட்டுப் பாதுகாப்பின் மீறல்களுக்கு வழிவகுக்கும், நமது நாட்டின் சமூக கட்டமைப்பை சீரழித்துவிடும்” என்று முன்னாள் ஆயுதப்படை தலைவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

நமது எல்லையில் தற்போது நிலவும் சூழ்நிலையில், தேசத்திற்குள் அமைதி மற்றும் ஒற்றுமையை சீர்குலைக்கும் எதுவும் வெளி சக்திகளை ஊக்குவிக்கும்; இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நம் பன்முக மற்றும் பன்மைத்துவ சமூகங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கு எதிரான இத்தகைய அப்பட்டமான அழைப்புகள் காவல்துறை மற்றும் இராணுவம் உட்பட சீருடையில் உள்ள உழைக்கும் ஆண்கள் மற்றும் பெண்களின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் கடுமையாக பாதிக்கும் என்றும் அவர்கள் அந்த கடிதத்தில் கூறியுள்ளனர்.

இந்தக் கடிதத்தில் முன்னாள் கடற்படைத் தலைவர்களான அட்மிரல் (ஓய்வு) எல்.ராம்தாஸ், அட்மிரல் (ஓய்வு) விஷ்ணு பகவத், அட்மிரல் (ஓய்வு) அருண் பிரகாஷ் மற்றும் அட்மிரல் (ஓய்வு) ஆர்.கே.தூன் உட்பட 100-க்கும் மேற்பட்ட உயரதிகாரிகள் கையெழுத்திட்டுள்ளனர்.


Share this News:

Leave a Reply