அஸ்ஸாமில் ஒரே மாதத்தில் மூன்று மதரஸாக்கள் இடிப்பு!

Share this News:

போங்கைகான் (31 ஆக 2022) அசாம் மாநிலத்தில் “பயங்கரவாத அமைப்புடன்” தொடர்புடையதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து , போங்கைகான் மாவட்டத்தில் உள்ள ஒரு மதரஸாவை இடிக்க அசாம் அரசு புதன்கிழமை காலை உத்தரவிட்டுள்ளது.

மார்கசூல் மஆரிஃப் குவாரியானா மதரஸா வளாகம் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுவதாக மாவட்ட நிர்வாகம் குற்றம் சாட்டியுள்ளது. இதனை அடுத்து அந்த மதரசாவை இடிக்க அஸ்ஸாம் அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த மதர்ஸாவை பிடிப்பதற்காக செவ்வாயன்று, அதிகாரிகள் கட்டிடத்தில் இருந்து குறைந்தது 224 மாணவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். முன்னதாக போலீசார் அந்த வளாகத்தை சோதனையிட்டதில், அன்சருல்லா பங்களா டீம் (ABT) என்ற அமைப்புடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சில ஆவணங்கள் கிடைத்ததாக தெரிவித்தனர்.

இதன் மூலம் அஸ்ஸாமில் இந்த மாதத்தில் இடிக்கப்படும் மூன்றாவது மதரஸா இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே அஸ்ஸாம் அரசு பாரபெட்டா மாவட்டத்தில் உள்ள ஷைகுல் ஹிந்த் மஹ்முதுல் ஹசன் ஜாமியுல் ஹுதா இஸ்லாமிய அகாடமி என்ற மற்றொரு மதரஸாவை இடித்தது. இந்த நிறுவனம் அரசு நிலத்தில் கட்டப்பட்டதாகவும், தீவிரவாத தொடர்புகள் இருப்பதாகவும் கூறி அந்த மதரசாவை அசாம் அரசு இடித்தது.

இந்த மாத தொடக்கத்தில், மாநிலத்தின் மோரிகான் மாவட்டத்தில் மொய்ராபரி பகுதியில் உள்ள ஜாமியுல் ஹுதா மதரஸா, என்ற மதரசாவும் இடிக்கப்பட்டது.

அசாமில் தற்போது அரசு நடத்தும் மதரஸாக்கள் எதுவும் இல்லை, ஏனெனில் அவை சமீபத்தில் வழக்கமான பள்ளிகளாக மாற்றப்பட்டுள்ளன.


Share this News:

Leave a Reply