ராகுல் காந்தி மீது போலீசார் தாக்குதல் நடத்தி கைது – உத்திர பிரதேசத்தில் பரபரப்பு!

371

லக்னோ (01 அக் 2020): உத்திர பிரதேசத்தில் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் மீது தடியடி நடத்தப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ரஸ் மாவட்டத்தில் 19 வயதான இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பூதாகரமாக வெடித்துள்ளது. குற்றவாளிகளை தூக்கிலிடவும், போலீசாரின் அடாவடியை எதிர்த்தும் இளம்பெண்ணின் உறவினர்கள், பொதுமக்கள், மாணவர்கள் என பலரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னெச்சரிக்கையாக ஹத்ரஸ் மாவட்டத்தில் வெளியாட்கள் நுழையாதவாறும், உள்ளூர் மக்கள் வெளியில் சுற்றத்தவாறும் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கூட்டு பாலியல் வன்கொடுமை ஆளாக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை சந்திக்க சென்றபோது ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் தடுத்து நிறுத்தபட்டனர். மேலும் போலீசார் தன்னை கீழே தள்ளிவிட்டு அடித்ததாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.