கேரள மக்களுக்கு நன்றி தெரிவித்த ஆயிஷா சுல்தானா!

Share this News:

திருவனந்தபுரம் (19 ஜூன் 2021): லட்சத்தீவு விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த நடிகையும்,இயக்குனருமான ஆயிஷா சுல்தானா நாளை லட்சத்தீவு பயணம் மேற்கொள்கிறார்.

கேரள தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பேசிய ஆயிஷா சுல்தானா, லட்சத்தீவில், தற்போது தினசரி, 100 பேரிடம் கொரோனா தொற்று கண்டறியப்படுகிறது. ‘இதை அத்தீவுகளில் வசிக்கும் மக்களுக்கு எதிராக, மத்திய அரசு கையில் எடுத்துள்ள உயிர் ஆயுதமாக கருதுகிறேன்’ என கருத்து தெரிவித்திருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக, லட்சத்தீவுகளின் பா.ஜ.க., தலைவர் அப்துல் காதர் ஹாஜி கவரத்தி போலீசில் கொடுத்த புகார் அடிப்படையில், ஆயிஷா சுல்தானா மீது தேசத் துரோகம், அரசின் மீது வெறுப்பு ஏற்படும் வகையில் பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளில், போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் இதுகுறித்த விசாரணைக்காக நாளை லட்சத்தீவு பயணிக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவில், “உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நான் விசாரணைக்காக லட்சத்தீவு செல்கிறேன். நான் உண்மையின் பாதையில் இருக்கிறேன். எனக்கு ஆதரவாக இருந்த கேரள மக்களுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இவ்வழக்கில் கேரள மாநில உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி, நடிகை ஆயிஷா சுல்தானா தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், எப்போதெல்லாம் போலீஸ் விசாரணைக்கு அழைத்தாலும் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என நிபந்தனையுடன், ஒரு வாரத்திற்கு முன்ஜாமின் வழங்கியது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply