அலோபதி மருந்துகள் குறித்த கருத்துக்களால் முக்குடைபட்டா பாபா ராமதேவ்!

புதுடெல்லி (24 மே 2021): அலோபதி மருத்துவம் முட்டாள்தனமானது என்று கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கிய பாபா ராமதேவ் தனது கருத்தை திரும்பப் பெற்றுள்ளார்..

யோகா குருவான பாபா ராம்தேவ், சமீபத்தில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் பேசுகையில், ‘கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை மற்றும் ஆக்சிஜன் கிடைக்காமல் உயிரிழந்தவர்களை விட, அலோபதி மருத்துவத்தால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். அலோபதி மருத்துவம் முட்டாள்தனமானது’ என்றார்.

இதனால் இந்தியாவின் மானம் கப்பலேறியது. ஏற்கனவே கொரோனாவால் இந்தியா அதிக அளவில் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் , ராம்தேவின் கருத்துகளை திரும்பப் பெற வலியுறுத்தினார்.

இதனையடுத்து, ஹர்ஷ்வர்தனுக்கு பாபா ராம்தேவ் எழுதிய கடிதத்தில், ‘அலோபதி குறித்த எனது முந்தைய அறிக்கையிலிருந்து பின்வாங்குகிறேன். ஒரு வாட்ஸ்ஆப் செய்தியின் உரையை மட்டுமே மேற்கோள் காட்டினேன். எனது கருத்துகளால் யாருடைய உணர்வுகளாவது காயமடைந்தால் மிகவும் வருந்துகிறேன். இந்த கருத்தை திரும்பப்பெற விரும்புகிறேன்’ எனக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஹாட் நியூஸ்:

ஷார்ஜாவில் இலவச பார்க்கிங் வசதிகள் மூடல்!

ஷார்ஜா (06 டிச 2022): ஐக்கிய அரபு அமீரகம் ஷார்ஜாவில் பல இடங்களில் கட்டணம் செலுத்தி பார்க்கிங் இருந்தாலும், நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள காலி இடங்களில் இலவசமாக நிறுத்தலாம். இந்த இடங்களை அதிகாரிகள்...

ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு நடந்த பிரசவம்!

புதுடெல்லி (05 டிச 2022): ஓடும் பேருந்தில் பெண் ஒருவருக்கு நடந்த பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. ஞாயிற்றுக்கிழமை அன்று டெல்லியில் இருந்து உத்தரபிரதேச மாநிலம் சிப்ரமாவ் நோக்கி சென்று கொண்டிருந்த மாநில சாலைப்...

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

புதுடெல்லி (06 டிஸா 2022): குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது. தலைமை நீதிபதி யு.யு. லலித் மற்றும் நீதிபதி ரவீந்திர பட்...