பதாஞ்சலி நிறுவனம் தயாரித்த கொரோனா மருந்துக்கு தடை!

புதுடெல்லி (23 ஜூன் 2020): பாபா ராம்தேவின் பதாஞ்சலி நிறுவனம் தயாரித்த கொரோனா மருந்துக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

உலகை அச்சுறுத்தும் கொரோனாவுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நிலையில் பல்வேறு மருந்துகள் ஆய்வின் அடிப்படையில் தற்காலிகமாக வழங்கப்பட்டு வருகின்றன. எனினும் ஒருபுறம் கொரோனாவுக்கு நிரந்தர மருந்து கண்டுபிடிக்கும் ஆய்வும் உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன.

இது இப்படியிருக்க யோகா குரு ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் கொரோனாவுக்கு தடுப்பு மருந்தை 7 நாட்களில் கண்டுபிடித்துவிட்டதாக தெரிவித்தது. ஆனால் இந்த மருந்துக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. பதஞ்சலி நிறுவனம் மருந்து விளம்பரத்தை நிறுத்த மத்திய ஆயுஷ் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பெயர், மருந்தின் கலவை பற்றிய விபரங்களை பதஞ்சலியிடம் கேட்கப்பட்டுள்ளது.

ஹாட் நியூஸ்:

இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் முன்னிலை!

புதுடெல்லி (08 டிச 2022): இமாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 21 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 20 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

குஜராத்தில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் தொகுதிகளில் வெற்றியை அள்ளிய பாஜக!

அஹமதாபாத் (08 டிச 2022): குஜராத்தில் முஸ்லிம்கள் கணிசமான எண்ணிக்கையில் உள்ள 19 சட்டமன்றத் தொகுதிகளில் 17 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. குஜராத் சட்டசபையில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் ஒரு முஸ்லீம் வேட்பாளரை...

டெல்லியில் முஸ்லிம் வாக்குகளை இழந்த ஆம் ஆத்மி கட்சி!

புதுடெல்லி (08 டிச 2022): டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் (எம்சிடி) தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) வெற்றி பெற்றாலும் பெரும்பாலான முஸ்லிம் வாக்குகளை இழந்துள்ளது 2020 சட்டமன்றத் தேர்தலுடன் ஒப்பிடுகையில் ஆம் ஆத்மி...