போலீசாரால் அடித்து நொறுக்கப்படும் தினக்கூலி காய்கறி வண்டி – ஏழைகளுக்கு மட்டும்தான் சட்டமா?

Share this News:

மும்பை (19 ஏப் 2020): மும்பையில் தினக்கூலி காய்கறி வண்டி ஒன்று மும்பை போலீசாரால் அடித்து நொறுக்கப்படும் காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதி வேகத்தில் பரவி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க வரும் மே 3 ஆம் தேதி வரை நாடெங்கும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

எனினும் இந்த ஊரடங்கால் அதிகம் பாதிக்கப்படுவது ஏழை கூலி தொழிலாளிகள்தான். அவர்களுக்கு தினமும் தொழில் செய்து அல்லது வேலை செய்து பிழைத்தால்தான் வாழ்க்கையை ஓட்ட முடியும், ஆனால் ஊரடங்கு கெடுபிடியால் அவர்களின் அன்றாட வாழ்க்கை கேள்விக் குறியாகியுள்ளது.

சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட வேண்டும் என்று சர்வதேச அளவில் கோரிக்கை எழுந்து வரும் நிலையில் இந்தியாவில் உயர்தர வகுப்பினர், பணக்காரர்கள் அவர்களின் தேவைகளை, கொண்டாட்டங்களை, மத்திய அரசின் சட்டத்தை பின்பற்றாமல் கொண்டாடிக் கொண்டுதான் உள்ளனர். அதேவேளை ஏழை எளிய மக்களுக்கு கெடுபிடிகள் அதிகரித்த வண்ணமே உள்ளன.

 

அந்த வகையில் மும்பையில் ஒரு ரோட்டோர கூலி காய்கறி வண்டி ஒன்று மும்பை போலீசாரால் அடித்து நொறுக்கப்படும் காட்சி வைரலாகி வருகிறது. பணக்காரர்கள், ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் அவரவர் தேவைகளை, கொண்டாட்டங்களை இப்போதும் கொண்டாடி வரும் நிலையில், ஏழைகளை மட்டும் அதுவும் உணவு பொருட்களை இவ்வாறு அடித்து கீழே தள்ளுவது நியாயமா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.


Share this News:

Leave a Reply