சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்வதாக ராகுல் காந்தி மீது புகார்!

Share this News:

புதுடெல்லி (14 செப் 2022): பாரத் ஜோடோ யாத்ராவை சட்ட ரீதியாக சிக்கலாக்க தேசிய குழந்தைகள் நலக் குழு மூலம் முயற்சி மேற்கொள்ளப் பட்டு வருவதாக தெரிகிறது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான கன்னியாகுமரி-காஷ்மீர் பாரத் ஜோடோ யாத்திரை குழந்தைகளை அரசியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்வதாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (என்சிபிசிஆர்) தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது.

ராகுல் காந்தி மீதும், காங்கிரஸ் கட்சி மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என அந்த கோரிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

குழந்தைகளை அரசியல் ஆயுதமாக பயன்படுத்துவதாகவும் புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. அரசியல் நிகழ்ச்சி நிரலுடன் குழந்தைகளைக் குறிவைத்து, ‘பாரத் ஜோடோ, பச்சே ஜோதோ’ என்ற கோஷத்தை எழுப்பி, குழந்தைகளை பிரச்சாரத்தில் பங்கேற்க வைப்பதாக புகார் எழுந்துள்ளன.

மேலும் சமூக ஊடகங்களில் இதுகுறித்த படங்கள் மற்றும் வீடியோக்கள் பரவி வருகின்றன. இது தேர்தல் விதிகளை மீறும் செயலாகும். தேர்தல் சட்டத்தின்படி, அரசியல் கட்சிகளில் உறுப்பினர்களாக இருப்பது வயது வந்தவர்களுக்கு மட்டுமே. அவ்வாறு செய்வது குழந்தைகளின் நீண்டகால மனநலத்தை பாதிக்கும் என குற்றம் சாட்டப்பட்டுள்ள.

புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களை விசாரித்து உரிய முடிவு எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply