பேரணி பொது கூட்டங்களுக்கு தடை – பாஜக புதிய யுக்தியில் தேர்தல் பிரச்சார வியூகம்!

Share this News:

புதுடெல்லி (18 ஜன 2022): ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களம் சூடுபிடித்துள்ள நிலையில் பேரணி மற்றும் பொது கூட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

இந்த நிலையில், புதிய பிரசார வியூகங்களை பா.ஜ.க. வரும் சட்டசபை தேர்தலில் எடுத்து வாட்டுகிறது. அதன்படி பூத் அளவில் பணிகளை வலுப்படுத்த பாஜக முடிவு செய்துள்ளது. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, அடிமட்ட மக்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளவும், வாக்காளர்களுடன் இணைப்பில் இருக்கவும் உயர்மட்ட தலைவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அடிமட்ட அளவில் செயல்பாடுகளை செயல்படுத்த பல்வேறு குழுக்களுக்கு பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்கு சாவடியிலும் குறைந்தது 8-10 கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு கூட்டத்திலும் குறைந்தது 20-50 பேர் கலந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு தலைவரும் குறைந்தது இரண்டு கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும் என ஜே.பி.நட்டா,உத்தரவிட்டுள்ளார்.

அதேபோல மஹாலா மோர்ச்சா மற்றும் யுவ மோர்ச்சா தலைவர்கள் பொது இடங்களில் பிரச்சாரம் செய்ய பொறுப்பளிக்கப் பட்டுள்ளனர்.. அவர்கள் பேருந்துகளிலும் மால்களிலும் மக்களுடன் தொடர்பு கொண்டு பிரச்சாரம் மேற்கொள்ளவர்கள்

தேர்தல் நாளன்று மக்களைச் சாவடிகளுக்கு அழைத்துச் செல்ல பாஜக மாநிலத் தலைமை நேரடியாக ஆட்களை நியமித்துள்ளது.


Share this News:

Leave a Reply