உயிருடன் புதைத்துவிடுவேன் – பாஜக பிரமுகர் மிரட்டல் பேச்சு!

589

அலிகார் (14 ஜன 2020): பிரதமர் மோடி குறித்து பேசுபவர்களை உயிருடன் புதைத்துவிடுவேன் என்று பாஜக பிரமுகர் வெறித்தனமாக பேசியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில், பா.ஜனதா பிரமுகர் ரகுராஜ் சிங் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்துபவர்களுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்தார்.

பிரதமர் மோடி, உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு எதிராக கோஷமிடுபவர்களை உயிருடன் புதைத்து விடுவேன். இருவரும் உங்கள் கோஷத்தை கண்டு கலங்குபவர்கள் அல்ல. அவர்கள் நாட்டை ஆள்பவர்கள். இதேபோன்று தான் ஆள்வார்கள்.

இதைப் படிச்சீங்களா?:  முஹம்மது ஜுபைர் கைதுக்கு ஐ.நா செய்தித் தொடர்பாளர் கண்டனம்!

இதற்கு விளக்கம் அளித்துள்ள பாஜக தலைமை, ரகுராஜ் சிங், பாஜக எம்.எல் ஏவோ அல்லது அமைச்சரோ அல்ல என்று தெரிவித்துள்ளது.

பாஜகவினரின் மிரட்டல் பேச்சு தொடர்ந்த வண்ணமே உள்ள நிலையில் பாஜக தலைமை அதுகுறித்து சரியான விளக்கம் அளிக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.