135 பேர் பலியான தொங்கு பால விபத்து – பாஜகவின் வெற்றியை பாதிக்கவில்லை!

Share this News:

அஹமதாபாத் (08 டிச 2022): குஜராத்தில் 135 பேர் பலியான தொங்கு பால விபத்து நடந்த மோர்பியில் பாஜக முன்னிலை வகிக்கிறது.

குஜராத்தில் 182 தொகுதிகளுக்கான சட்டச்சபை தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்றது. டிசம்பர் 1ம் தேதி முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கும், டிசம்பர் 5ம் தேதி 2ம் கட்டமாக 93 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது.

காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் குஜராத்தில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. குஜராத் முதலமைச்சர் வேட்பாளரான பூபேந்திர படேல் கட்லோடியா தொகுதியில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

தேர்தல் நெருங்கும் நேரத்தில் குஜராத்தின் மோர்பி மாவட்டத்தில் கடந்த அக்டோபர் 30-ம் தேதி தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 135 பேர் உயிரிழந்தனர்.

இதனிடையே, குஜராத் தேர்தலில் மோர்பி தொகுதியில் பாஜக வேட்பாளராக கந்திலால் அம்ருத்யா போட்டியிட்டார். இந்த சம்பவம் தேர்தலில் பிரதிபலிக்கும் என அரசியல் விமர்சகர்கள் கூறிவந்தனர்.

தொங்கு பாலத்தில் முறைகேடு, ஊழல் காரணத்தால் 140 இந்துக்கள் பரிதாபமாக உயிர் இழந்த சூழலிலும் “இது குறித்து அரசியல் செய்ய விரும்பவில்லை” என ராகுல்காந்தி கூறியிருந்தார்.

இந்நிலையில், குஜராத் தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகிறது. மோர்பி தொகுதியில் போட்டியிட பாஜக வேட்பாளர் 10 ஆயிரத்து 156 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.


Share this News:

Leave a Reply