காஷ்மீரில் பிடிபட்ட பாஜக பயங்கரவதியிடம் பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்!

ஸ்ரீநகர் (04 ஜூலை 2022): காஷ்மீரில் பிடிப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவன் பாஜக வை சேர்ந்தவன் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் ரியாஸி பகுதியில் உள்ள கிராம மக்கள் இரு லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளை பிடித்து காவல்துறையிடடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் இருந்து ஏகே 47 துப்பாக்கிகள், 7 கையெறி குண்டுகள், கைத் துப்பாக்கி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

அந்த இருவரில் ஒருவன் தாலிப் ஹூசைன் ஷா என்பவன் பாஜகவில் நிர்வாகியாக உள்ளான் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் உதய்புர் கொலையில் ஈடுபட்ட கொலையாளிக்கும் பாஜவுடன் தொடர்பிருப்பது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஹாட் நியூஸ்: