பாஜக அமைச்சரவையில் மூன்றாவது விக்கெட் – கலகலத்துப் போன உ.பி அரசு!

314

லக்னோ (13 ஜன 2022): உத்தரப் பிரதேச அமைச்சர் தரம் சிங் சைனி வியாழக்கிழமை பாஜகவில் இருந்து விளக்கியுள்ளார்.

மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில் பாஜகவின் உறவை முறித்துக் கொண்ட ஒன்பதாவது எம்எல்ஏ ஆனார் தரம் சிங் சைனி.

முந்தைய நாள், தரம் சிங் சைனி தனக்கு மாநில அரசு ஒதுக்கிய பாதுகாப்பு அதிகாரிகளையும், வீட்டையும் திருப்பிக் கொடுத்தார், இது அவர் பாஜகவில் இருந்து விலகப் போகிறார் என்ற ஊகத்தைத் தூண்டியது.

தரம் சிங் சைனி, உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகம் ஆகிய துறைகளின் மாநில அமைச்சராக உள்ளார்.

பிஜேபியின் உத்தரபிரதேச பிரிவில் கடந்த சில நாட்களாக கேபினட் அமைச்சர் சுவாமி பிரசாத் மவுரியாவில் தொடங்கி தொடர்ந்து மூன்று அமைச்சர்கள் விளக்கியுள்ளனர். அப்போது, இன்னும் பல சட்டமன்ற உறுப்பினர்கள் இதைப் பின்பற்றுவார்கள் என்று மவுரியா கூறியிருந்தார்.

தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், விவசாயிகள், வேலையில்லாத இளைஞர்கள் மற்றும் சிறு வணிகர்கள் மீது “மோசமான புறக்கணிப்பு” காரணமாக ராஜினாமா செய்வதாக அவர் கூறினார்.

அடுத்த நாட்களில், பல பாஜக எம்எல்ஏக்கள் பிரஜேஷ் பிரஜாபதி, ரோஷன் லால் வர்மா, பகவதி சாகர், முகேஷ் வர்மா, வினய் ஷக்யா உள்ளிட்ட பலர் கட்சியில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.