பில்கீஸ் பானு கற்பழிப்பு கொலை குற்றவாளிகள் பிராமணர்கள் – பாஜக எம் எல் ஏ!

476

புதுடெல்லி (18 ஆக 2022):பில்கிஸ் பானோவை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று அவர்களை விடுவிக்க காரணமாக இருந்த குஜராத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி எம்எல்ஏக்களில் ஒருவரான சிகே ரவுல்ஜி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டி ஒன்றில் அவர் தெரிவிக்கையில் . “அவர்கள் (11 குற்றவாளிகள்) குற்றவாளிகளா இல்லையா என்பது எங்களுக்குத் தெரியாது. அவர்கள் பிராமணர்கள் அவர்களின் நடத்தை நன்றாக இருந்தது. மேலும், அவர்கள் நன்கு பண்பட்ட மனிதர்கள்.”என்றார்

இதைப் படிச்சீங்களா?:  நம்பிக்கை இழக்காமல் தொடர்ந்து போராடுவேன் - பில்கீஸ் பானு திட்டவட்டம்!

கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தின்போது பில்கீஸ் பானு என்ற 5 மாத கர்ப்பிணி பெண் 11 பேரால் வன்புணர்வு செய்யப்பட்டு அவரது குடும்பத்தினர் 7 பேர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 11 பேர் ஆகஸ்ட் 15 அன்று ஆளும் குஜராத் பாஜக அரசால் விடுதலை செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.