கவிழும் அபாயத்தில் பாஜக ஆட்சி!

701

திரிபுரா (17 ஜூன் 2021): திரிபுரா மாநிலத்தில் ஒன்பது பாஜக எம்.எல்.ஏக்கள் திரிணாமூல் காங்கிரஸில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அங்கு ஆளும் பாஜக ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.

திரிபுரா மாநிலத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்தது. இந்நிலையில் மேற்கு வங்க திரிணாமூல் காங்கிரஸின் மூத்த தலைவராக இருந்த முகுல் ராய், பாஜகவில் இணைந்தார். அதேநேரத்தில் திரிபுரா திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 6 பேர் பாஜகவில் இணைந்தனர். இதற்கு முகுல் ராயே காரணம் என கூறப்பட்டது.

இதைப் படிச்சீங்களா?:  சாக்லேட்டில் விஷம் -மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

தற்போது முகுல் ராய் மீண்டும் பாஜகவிலிருந்து திரிணாமூல் காங்கிரஸுக்கு மாறினார். இதன்தொடர்ச்சியாக தற்போது திரிணாமூல் காங்கிரஸில் இருந்து பிரிந்தவர்கள் உட்பட ஒன்பது எம்.எல்.ஏக்கள் திரிணாமூல் காங்கிரஸுக்கு தாவப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அங்கு ஆளும் பாஜக அரசுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.