போன் ஒட்டுக்கேட்பு – பாஜக அரசு மீது சிவசேனா தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு!

Share this News:

மும்பை (24 ஜன 2020): முந்தைய பாஜக ஆட்சியில் நான் உட்பட பல தலைவர்களின் போன் ஓட்டுக் கேட்கப் பட்டுள்ளது என்று , சிவசேனா மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “மஹாராஷ்டிராவில், கடந்த, அக்டோபரில் நடந்த சட்டபை தேர்தலுக்குப் பின், ஆட்சி அமைப்பதில் பெரும் குழப்பம் ஏ்றபட்டது. தேர்தலுக்குப் பின், பா.ஜ.,வுக்கு எதிரான கூட்டணி அமைப்பதில், முக்கிய பங்காற்றினேன். அப்போது, எனது போன் பேச்சுக்கள் ஒட்டு கேட்கப்பட்டன. இதை, பா.ஜ., மூத்த தலைவர் ஒருவரே என்னிடம் தெரிவித்தார்.

என் போன் மட்டுமின்றி, தேசியவாத காங்., தலைவர் சரத் பவார், சிவசேனா மூத்த தவைர்கள் உட்பட, பலரது போன் பேச்சுக்கள் ஒட்டு கேட்கப்பட்டுள்ளது. இது பற்றி விசாரிக்க, ‘சைபர்’ பிரிவு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.மாநிலத்தில் சிவசேனா தலைமையில் ஆட்சி அமைய மூல காரணமாக இருந்தவர் சரத் பவார். அதனால் தான், அவருக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை, மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது.” என்று சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

ஆனால் சஞ்சய் ராவத்தின் குற்றச்சாட்டை மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் மறுத்துள்ளார்.


Share this News:

Leave a Reply