மசூதி உள்ளிட்ட மத வழிபாட்டு தலங்களில் தேசிய கொடியை ஏற்ற பாஜக திட்டம்!

548

புதுடெல்லி (02 ஆக 2022): : ‘ஹர் கர் திரங்கா’ பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, மசூதி உள்ளிட்ட மத ஸ்தலங்களில் தேசியக் கொடியை ஏற்ற பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) சிறுபான்மை பிரிவு திட்டமிட்டுள்ளது.

நாடு முழுவதும் இதுபோன்ற 7,000 க்கும் மேற்பட்ட இடங்களில் தேசியக் கொடியை பாஜக திட்டமிட்டுள்ளதாக, பாஜக சிறுபான்மை மோர்ச்சா தலைவர் ஜமால் சித்திக் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில், ஆசாதி கா அம்ரித் மஹோஸ்தவ்’ நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் ‘ஹர் கர் திரங்கா’ வை கொண்டாடும் பிரச்சாரத்தை தொடங்க உள்ளதாகவும், மசூதி, குருத்வாரா, தேவாலயங்களில் மூவர்ணக் கொடியை ஏற்றி, ‘ஆசாதி கா அம்ரித் மஹோஸ்தவின்’ அங்கமாக மாறி சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவுகூர்ந்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்துமாறு, பாஜக சிறுபான்மை மோர்ச்சாவின் தொண்டர்கள் சார்பாக
மதத் தலைவர்களிடம் கோரிக்கை விடுவதாக சித்திக் கூறினார்.

இதைப் படிச்சீங்களா?:  தேச துரோக வழக்கில் சிறையில் உள்ள ஷர்ஜீல் இமாமுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு!

வழிபாட்டுத் தலங்களில் மூவர்ணக் கொடியை ஏற்ற மதத் தலைவர்கள் சம்மதிப்பார்களா என்ற கேள்விக்கு, இது மதக் கொடி இல்லை என்றும், தேசியக் கொடியை ஏற்றுவதற்கு எந்த மதமும் தடை விதிக்கவில்லை என்றும் சித்திக் கூறினார்.

“ஹர் கர் திரங்கா’ பிரச்சாரத்தில் சேருமாறு மதத் தலைவர்களிடம் நாங்கள் ஏற்கனவே வேண்டுகோள் விடுக்கத் தொடங்கியுள்ளோம், எங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. செவ்வாயன்று, நான் மணிப்பூரில் உள்ள மதத் தலைவர்களைச் சந்திக்கிறேன், பின்னர் நாகாலாந்தில் ஆகஸ்ட் 13 முதல் 15 வரை மூவர்ணக் கொடியை ஏற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். நாடு முழுவதும் உள்ள மத மற்றும் சமூகத் தலைவர்களிடம் இதேபோன்ற வேண்டுகோளை நாங்கள் செய்கிறோம், ”என்று சித்திக் கூறினார்.