பாஜக வைரஸ் – சானிடைசர் அடித்து சுத்தம் செய்யப்பட்ட பாஜகவினர்!

384

கொல்கத்தா (24 ஜூன் 2021): பாஜகவிலிருந்து திரிணாமுல் காங்கிரசில் இணைந்த 150 பேருக்கு பாஜக வைரஸ் இருப்பதாகக் கூறி அவர்களை சானிடைசர் அடித்து திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் வரவேற்றுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த தேர்தல் பாஜகவுக்கு பேரதிர்ச்சியை கொடுத்த நிலையில், பாஜக கூடாரம் காலியாகி வருகிறது.

ஏற்கனவே திரிணாமுல் காங்கிரசிலிருந்து பாஜகவில் இணைந்தவர்கள் திரிணாமுல் காங்கிரசுக்கு திரும்பி வருகின்றனர்.  இந்நிலையில் பிர்பூமின் இளம்பஜார் தொகுதியில் 150 பாஜகவினர் திரிணாமுல் காங்கிரசில் இணைந்தனர்.

இதைப் படிச்சீங்களா?:  முஹம்மது ஜுபைர் கைதும் பின்னணியும்!

இவர்களுக்கு பாஜக வைரஸ் இருப்பதாகக் கூறிய திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் அவர்களுக்கு சானிடைசர் அடித்து வரவேற்றுள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த பாஜக வைரஸ் சுத்திகரிப்பு செய்வதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.