கோவில்கள் மீதான தாக்குதல்களில் பாஜகவினருக்குத் தொடர்பு – டிஜிபி தகவல்!

730
Temple Attack bjp

புதுடெல்லி (17 ஜன 2021): ஆந்திர மாநிலத்தில் கோயில்கள் மீது நடந்து வரும் தாக்குதல்களில் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் பாஜகவினருக்குத் தொடர்பிருப்பதாக ஆந்திர டிஜிபி சவாங் தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பல கோவில்கள் தாக்கப்பட்டுள்ளன. சில கோயில்கள் சேதமடைந்துள்ளன. இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு பலர் கைதாகியுள்ளார்..

இந்நிலையில் இது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் 15 பேர் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவர்களும் 4 பேர் பாஜகவினரைச் சேர்ந்தவர்களும் உள்ளதாக ஆந்திர மாநில டிஜிபி தெரிவித்துள்ளார். மேலும் 6 பேரைத் தேடி வருவதாகவும் டிஜிபி தெரிவித்தார்.

இதைப் படிச்சீங்களா?:  தேர்தல் ஆணையத்திற்கு மோடி ஆணையம் என பெயர் வைக்கலாம் - மம்தா சாடல்!

இதற்கிடையே, ஆந்திராவில் கோவில்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களில் அரசியல் உள்நோக்கம் உள்ளதாகவும் தனது ஆட்சியின் பல்வேறு நல்ல திட்டங்களை மறைக்க எதிர் காட்சிகள் சதி செய்வதாகவும் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார்.