பெங்களூரில் பயங்கரம் – வெடித்துச் சிதறிய மர்ம பொருள்: எம்.எல்.ஏ ஹாரிஸ் படுகாயம்!

853

பெங்களூரு (22 ஜன 2020): பெங்களூரில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மர்ம பொருள் வெடித்து பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது,

பெங்களூரு சாந்திநகரில் உள்ள வண்ணார்பேட்டை பஜார் தெருவில், நடந்த பிறந்தநாள் விழாவிற்கு அந்த தொகுதி எம்.எல்.ஏ ஹாரிஸ் சிறப்பு விருந்தினராக சென்றிருந்தார். அப்போது அங்கு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டு இருந்தன. அப்போது இரவு 8.30 மணியளவில், திடீரென மர்ம பொருள் ஒன்று வெடித்துச் சிதறியது. இதில எம்.எல்.ஏ ஹாரிஸ் உட்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அருகிலுள்ள செயின்ட் பிலோமினா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதைப் படிச்சீங்களா?:  ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை விளம்பரத்தில் சாவர்க்கர் படம்!

சம்பவ இடத்தில், பெங்களூரு மத்திய மண்டல துணை போலீஸ் கமிஷனர் சேத்தன் சிங் ரத்தோர் உள்ளிட்ட உயரதிகாரிகள் ஆய்வு செய்தனர். தடயவியல் நிபுணர்களும் வெடித்த மர்மபொருளின் சிதறல்களை சேகரித்து ஆய்வு செய்தனர். போலீஸ் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு நடந்தது.

கடந்த இரு நாட்களுக்கு முன்பு மங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டு ஒன்று கண்டெடுக்கப் பட்ட நிலையில் ஆதித்ய ராவ் என்பவன் சரண் அடைந்தான்.

இந்த சம்பவத்தை அடுத்து பெங்களூரில் தற்போது மர்ம பொருள் வெடித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து நகர் முழுவதையும் போலீசார் உஷார் படுத்தி உள்ளனர்.