நீதிமன்ற வளாகத்தில் குண்டு வெடிப்பு! – உத்திர பிரதேசத்தில் பரபரப்பு!

514

லக்னோ (13 பிப் 2020): உத்திர பிரதேசம் லக்னோ நீதிமன்ற வளாகத்தில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் 2 வழக்கறிஞர்கள் உள்பட 3 பேர் காயமடைந்துள்ளனர்.

லக்னோ ஹஸ்ரத்கஞ்ச் பகுதியில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் 2 வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 3 பேர் காயம் அடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு போலீசார் விரைந்தனர். அப்பகுதியில் இருந்து வெடிக்காத 3 வெடி குண்டுகளைக் கைப்பற்றினர். வெடிகுண்டு வீசப்பட்ட பகுதியில் ஏராளமான வழக்கறிஞர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதைப் படிச்சீங்களா?:  தேச துரோக வழக்கில் சிறையில் உள்ள ஷர்ஜீல் இமாமுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு!

லக்னோ பார் அசோசியேசன் இணை செயலாளர் சஞ்சீவ் லோதி, தன்னை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். மற்றொரு வழக்கறிஞரான ஜிது யாதவ் மீது அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இரண்டு வழக்கறிஞர்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக வெடிகுண்டு வீசப்பட்டிருக்கலாம் என போலீஸ் தெரிவித்துள்ளது.