டெல்லி மசூதியை தாக்கி காவிக்கொடி ஏற்றிய இந்துத்துவாவினர் – முஸ்லீம் இளைஞர்கள் மீது வழக்கு!

புதுடெல்லி (20 ஏப் 2022): டெல்லி ஜஹாங்கிர்புரியில் அனுமன் ஜெயந்தி கொண்டாட்டம் என்ற போர்வையில் இரு பிரிவினருக்கு இடையே நடந்த மோதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 முஸ்லிம் இளைஞர்கள் மீது காவல்துறையினர் கடுமையான தேசிய பாதுகாப்பு (என்எஸ்ஏ) வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த சட்டத்தின் மூலம் குற்றம் சாட்டப்பட்டவர்களை ஒரு வருடம் வரை விசாரணையின்றி சிறையில் அடைக்க அனுமதிக்கிறது.

சமூக ஊடகங்களில் ஹிந்துத்துவவாதிகள் துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை பகிரங்கமாக காண்பிக்கும் வீடியோக்கள் மற்றும் ஆத்திரமூட்டும் முழக்கங்களுடன் மோதல்களைத் தூண்டும் வீடியோக்கள் ஆதாரங்களாக இருந்தும், முஸ்லிம்களை மட்டும் காவல்துறை வேட்டையாடியுள்ளது.

முக்கிய குற்றவாளிகளாக காவல்துறையால் குற்றம் சாட்டப்பட்ட அன்சார், சலீம், சோனு என்ற இமாம் ஷேக், தில்ஷாத் மற்றும் அஹிர் ஆகியோர் மீது என்எஸ்ஏ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வடமேற்கு டெல்லியில் நடந்த மோதல் காரணமாக கடும் நடவடிக்கை எடுக்குமாறு டெல்லி காவல்துறை கமிஷனர் ராகேஷ் அஸ்தானாவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டதை அடுத்து, முஸ்லிம் இளைஞர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இரண்டு நாட்களுக்கு முன் நடந்த இந்த சம்பவத்தில் காவல்துறை உட்பட இருவர் காயமடைந்தனர். ஜஹாங்கிர்புரி பகுதியில் அனுமதியின்றி அனுமன் ஜெயந்தி ஊர்வலம் நடந்தது. அப்போது மசூதி முன் ஊர்வலம் சென்றபோது, ​​ இந்துத்துவாவினர் ஆத்திரமூட்டும் கோஷங்கள் எழுப்பியதாலும், மசூதி மினாரில் காவிக்கொடி ஏற்றியதை அடுத்தும் அங்கு மோதல் ஏற்பட்டது.

ஹாட் நியூஸ்:

ஈரானில் ஹிஜாப் கண்காணிப்பு பிரிவு கலைப்பு!

டெஹ்ரான் (05 டிச 2022): ஈரானில் ஹிஜாபுக்கு எதிராக பெண்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அந்நாட்டு அரசு ஹிஜாப் கண்காணிப்பு காவல் பிரிவைக் கலைத்துள்ளது. ஈரானில் வீட்டைவிட்டு வெளியில் செல்லும் 9...

டிசம்பர் 6 அன்று மதுரா மசூதியில் ஹனுமான் வேதம் ஓத திட்டம் – 16 பேர் மீது வழக்குபதிவு!

மதுரா (02 டிச 2022): டிசம்பர் 6 அன்று மதுரா ஷாஹி ஈத்கா மசூதிக்குள் ஹனுமான் வேதம் ஓத இந்து அமைப்பினர் விடுத்த அழைப்பை அடுத்து, மதுரா நகர மாஜிஸ்திரேட் அந்த அமைப்பில்...

மான்டோஸ் புயல் இன்று மாலைக்குள் கரையை கடக்கலாம்!

சென்னை (07 டிச 2022): வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது இன்று மாலைக்குள் புயலாக மாறி, நாளை காலை தமிழக - ஆந்திரா...