தீவிர சிகிச்சைப் பிரிவில் இந்திய பொருளாதாரம் – ப.சிதம்பரம் தாக்கு!

Share this News:

புதுடெல்லி (10 பிப் 2020): இந்திய பொருளாதாரம் தீவிர சிகிச்சப் பிரிவில் உள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் இன்று பேசிய சிதம்பரம், இந்திய பொருளாதாரம் குறித்து கடும் கவலை கொண்டார்.

மேலும் பொருளாதாரம் பாதிக்கப்படுவதை தடுக்க மோடி தலைமையிலான அரசு போதிய நடவடிக்கைகளை எடுக்க தவறி விட்டது. மிகவும் திறமையற்ற, தகுதியற்ற டாக்டர்களால் பொருளாதாரம் தீவிர சிகிச்சைப் பிரிவுக்குள் தள்ளப்பட்டுள்ளது. அதனை வெளியில் கொண்டு வர தெரியாத தகுதியற்ற டாக்டர்கள், தங்களுக்கு தகுதி இல்லை என்பதையும் ஒப்புக் கொள்ள மறுக்கிறார்கள். என்றார்.

மேலும் முன்னாள் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் போன்ற திறமையான டாக்டர்கள் நாட்டை விட்டு சென்று விட்டனர். என்றும் அவர் கவலை தெரிவித்தார்.


Share this News:

Leave a Reply