இந்திய சீன எல்லையில் நடந்த மோதலில் 43 சீன ராணுவ வீரர்கள் பலி!

Share this News:

லடாக் (16 ஜூன் 2020): இந்திய சீன எல்லையில் திங்கள் கிழமை இரவு இரு நாட்டு ராணுவத்தினருக்கிடையே நடைபெற்ற மோதலில் சீன வீரர்கள் 43 பேர் உயிரிழந்ததக ஏ என்.ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் திங்கள்கிழமை இரவு இந்திய மற்றும் சீன துருப்புக்களுக்கு இடையே நடந்த மோதலில் மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் சீனா தரப்பில் 43 பேர் கொல்லப்பட்டதாகவும் தற்போது செய்தி வெளியாகியுள்ளது.

முன்னதாக இந்தியா தரப்பில் ஒரு இந்திய ராணுவ அதிகாரி மற்றும் இரண்டு ஜவான்கள் என மூன்று வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இந்தியா டுடே டிவியிடம் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

இதனை தொடர்ந்து 43 சீன ராணுவ வீரார்கள் கொல்லப்பட்டதாக தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய மற்றும் சீன துருப்புக்களுக்கு இடையில் ஐந்து வாரங்களுக்கும் மேலாக பதற்றம் நிலவி வரும் நிலையில் திங்கள்கிழமை இரவு மோதலாக மாறியது, அப்போது இரு தரப்பிலும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. எனினும் சீனாவின் இழப்புகள் குறித்து இந்திய ராணுவம் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.


Share this News: