காஷ்மீர் புல்வாமாவில் பயங்கரவாத தாக்குதல் – ஒருவர் பலி!

591

புல்வாமா (09 பிப் 2020): காஷ்மீர் புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒருவர் பலியாகியுள்ளார்.

55 வயது குலாம் நபி மிர் என்பவர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இந்த தாக்குதலில் குலாம் நபி மிர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஞாயிறு (09 பிப்) மாலை 07:30 மணிக்கு இச்சம்பவம் நடந்துள்ளது.

இதைப் படிச்சீங்களா?:  தேச துரோக வழக்கில் சிறையில் உள்ள ஷர்ஜீல் இமாமுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு!

இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த குலாம் நபி மிர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.