Home இந்தியா சிஏஏ ஆதரவு பேரணியில் ஈடுபட்டவர்கள் குடிபோதையில் மாணவிகளிடம் பாலியல் சீண்டல்!

சிஏஏ ஆதரவு பேரணியில் ஈடுபட்டவர்கள் குடிபோதையில் மாணவிகளிடம் பாலியல் சீண்டல்!

புதுடெல்லி (10 பிப் 2020): குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பேரணியில் ஈடுபட்டவர்கள் கல்லூரி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதோடு, அசிங்கமாக நடந்து கொண்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி கார்கி கல்லூரியில் 3 நாட்கள் கல்லூரி விழா நடைபெற்று வந்தது.  விழாவின் இறுதி நாளான சனிக்கிழமை அங்கு கல்லூரி மாணவிகள் நிகழ்ச்சிக்காக குழுமி இருந்தனர்.

இந்நிலையில் அவ்வழியே வந்த சிஏஏ ஆதரவு பேரணியில் ஈடுபட்ட கும்பல் கல்லூரிக்குள் நுழைந்து மாணவிகளிடம் அத்துமீறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளது.

இதுகுறித்து பெயர் சொல்ல விரும்பாத ஒரு மாணவி கூறும்போது, “சிஏஏ ஆதரவு கும்பல் சனிக்கிழமை பிற்பகல் 03:30 மணிக்கு கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்தது. அவர்கள் அனைவரும் மது அருந்தியிருந்தனர். மேலும் ‘ஜெய்ஸ்ரீராம்’ என்ற முழக்கத்துடன் மாணவிளின் அங்கங்களை தொட்டு கொடுமை படுத்தினர். இது இரவு 09:30 மணி வரை நீண்டது. இவை அனைத்தையும் பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீஸ் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.” என்றார்.

இதைப் படிச்சீங்களா?:  தவறான முடிமாற்று அறுவை சிகிச்சையால் இளைஞர் மரணம்!

இன்னொரு மாணவி கூறுகையில், “சொல்லவே அசிங்கமாக இருக்கிறது. எங்கள் முன்னிலையில் அவர்கள் செய்த செயலை வாயால் கூற முடியாது.” என்றார் கண்ணீருடன். மேலும் கல்லூரி நிர்வாகம் மீதும் மாணவிகள் குற்றம் சுமத்துகின்றனர்.

நாட்டின் தலைநகரில் அரங்கேறிய இந்த அவலத்தை ஒரு ஊடகம் கூட கண்டு கொள்ளவில்லை என்பது கொடுமையிலும் கொடுமை.

உங்களுடன் வாசிப்பவர்கள்

நம்பிக்கை இழக்காமல் தொடர்ந்து போராடுவேன் – பில்கீஸ் பானு திட்டவட்டம்!

ஆமதாபாத் (02 டிச 2022): எனக்கு பொதுமக்கள் தரும் ஆதரவு ஆறுதல் அளிக்கிறது. நீதிமன்றத்தில் குற்றவாளிகளுக்கு எதிராக தொடர்ந்து போராடுவேன் என்று பில்கீஸ் பானு தெரிவித்துள்ளார். 2002 ஆம் ஆண்டு தனது கூட்டுப் பலாத்காரம்...

ப்ளூடூத் பயன்படுத்துபவர்கள் கவனிக்க வேண்டியவை!

ப்ளூடூத் மற்றும் ஒயர்லெஸ் சாதனங்களின் டிமாண்ட் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கையில் கட்டும் ஸ்மார்ட்வாட்ச், கழுத்தோடு மாட்டப்படும் ப்ளூடூத் ஹெட்செட், ஒயர்லெஸ் ஏர்பாட், மவுஸ், ஸ்பீக்கர் என அதன் பட்டியல்...

தேங்காய் துண்டு தொண்டையில் சிக்கி குழந்தை உயிரிழப்பு!

ஐதராபாத் (05 டிச 2022): தேங்காய் துண்டு தொண்டையில் சிக்கி ஒரு வயது சிறுவன் உயிரிழந்தார். தெலுங்கானா மாநிலம் நெகொண்டா மண்டலத்தைச் சேர்ந்த படாவத் மாலு கவிதா மகன் மணிகண்டா (1) என்ற குழந்தைக்கு...

ஒரு கார்பரேட் கம்பெணி தமிழகத்தை ஆளுகிறது – எடப்பாடி பழனிச்சாமி!

கோவை (02 டிச 2022): ஒரு கார்பரேட் கம்பெணி தமிழகத்தை ஆளுகிறது என்று திமுகவை சாடி முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். ஆளும் திமுக அரசின் சொத்து வரி உயர்வு, மின் கட்டண...