காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி – மேலும் ஒரு வேட்பாளர் பலி!

Share this News:

கொல்கத்தா (15 ஏப் 2021): மேற்கு வங்க காங்கிரஸ் வேட்பாளர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.

மேற்கு வங்காள சட்டசபைக்கான தேர்தல் 8 கட்டங்களாக அறிவிக்கப்பட்டு இதுவரை 4 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. வருகிற 17ந்தேதி 5வது கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 45 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தலில் 319 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களில் 39 பேர் பெண்கள் ஆவர்.

தேர்தல் ஜல்பைகுரி, கலிம்போங், டார்ஜிலிங், நாடியா, வடக்கு 24 பர்கானாஸ் மற்றும் புர்பா வர்தமான் ஆகிய 6 மாவட்டங்களில் நடக்கிறது. மேற்கு வங்காளத்தில் 5வது கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் முடிவடைந்தது.

தேர்தல் நடைபெறவுள்ள முர்ஷிதாபாத் மாவட்டத்தின் சாம்ஷெர்கஞ்ச் சட்டசபை தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுபவர் ரியாவுல் ஹேக். இவருக்கு நடந்த கொரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதியானது.

இதனால் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 3 மணியளவில் உயிரிழந்து விட்டார். இதனை கட்சியின் நெருங்கிய வட்டாரம் தெரிவித்து உள்ளது.

கடந்த வரம் தமிழகத்தில் தேர்தல் முடிந்துள்ள நிலையில், ஏற்கனவே தமிழகத்தில் ஒரு காங்கிரஸ் வேட்பாளர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply