மணிப்பூரில் கவிழ்கிறது பாஜக ஆட்சி – ஆட்சி அமைக்க காங்கிரஸ் உரிமை கோரல்!

Share this News:

மணிப்பூர் (18 ஜூன் 2020): மணிப்பூரில் கவர்னரை சந்தித்து, ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி உரிமை கோரியுள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் மொத்தம் 60 சட்டசபை இடங்கள் உள்ளன. கடந்த 2017-ல் நடந்த தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் 28 இடங்களை பெற்றது. இருப்பினும் காங்கிரஸை விட குறைவாக 21 இடங்களை மட்டுமே பெற்ற பா.ஜ., கட்சிக்கு 4 இடங்களை பிடித்த நாகா மக்கள் முன்னணி, மற்றும் தலா ஒரு இடங்களை வென்ற எல்.ஜே.பி., சுயேட்சை , ஏ.ஐ.டிசி உள்ளிட்ட பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. முதல்வராக பா.ஜ.வை சேர்ந்த என்.பிரேன்சிங் முதல்வாராக பதவி வகித்து வருகிறார்.

ஆனால் அங்கு திடீர் திருப்பமாக பா.ஜ.கவுக்கு அளித்து வந்த ஆதரவை, 9 கூட்டணி எம்.எல்.ஏ.,க்கள் வாபஸ் பெற்றனர். இதனையடுத்து, சுயேட்சைகளின் ஆதரவுடன், காங்., ஆட்சியை பிடிக்க முயற்சி செய்து வருகிறது

மேலும் , கோன்ராட் சங்மாவின் தேசிய மக்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் காங்., ஆதரவை வழங்கியுள்ளது மேலும் காங்கிரஸுக்கு வலு சேர்த்துள்ளது. மேலும் திரிணாமுல் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ., ஒருவரும், சுயேட்சை எம்.எல்.ஏ., ஒருவரும் காங்கிரஸுக்கு ஆதரவளித்துள்ளனர்.

இக்கூட்டணி கட்சிகளின் தலைவராக இருக்கும் ஒக்ரம் இபோதி சிங், கவர்னரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளார். மேலும் சட்டசபையை கூட்டி, நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தவும் வலியுறுத்தி உள்ளார். இதனால் பாஜக ஆட்சி அங்கு கவிழும் நிலை உறுவாகியுள்ளது.


Share this News: