ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவை முந்திய காங்கிரஸ்!

Share this News:

ஜெய்ப்பூர் (31 ஜன 2021): ராஜஸ்தான் நகராட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் காங்கிரஸ் முன்னணி வகிக்கிறது.

இதுவரை வெளியாகியுள்ள 2601 இடங்களில் காங்கிரஸ் 1012 இடங்களிலும் . பாஜக 947 இடங்களிலும் முன்னணியில் உள்ளன.

20 மாவட்டங்களில் உள்ள 90 உள்ளாட்சி அமைப்புக்களுக்கு இந்த தேர்தல் நடத்தப்பட்டது. மொத்தமுள்ள 3035 வார்டுகளில் 994க்கு இந்த தேர்தல் நடத்தப்பட்டது. இதில் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவியது.

இன்று வாக்கு எண்ணும் பணி நடைபெறு வருகிறது. பிற்பகலில் அறிவிக்கப்பட்ட தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் 1030 இடங்களையும், பாஜக 950 இடங்களையும், சுயேட்சை வேட்பாளர்கள் 670 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். ஆளும் கட்சியான காங்கிரஸ் 398 வார்டுகளையும், பாஜக 333 வார்டுகளையும் கைப்பற்றி உள்ளன.

காங்கிரஸ் கட்சியினர் தங்களது வெறியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.


Share this News:

Leave a Reply