மோடிக்கு மதிப்பு மிக்க பரிசு வழங்கிய காங்கிரஸ் கட்சி!

புதுடெல்லி (27 ஜன 2020): பிரதமர் மோடிக்கு அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை பரிசாக வழங்க ஆர்டர் செய்துள்ளது காங்கிரஸ் கட்சி.

பாஜக அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டம், மத அடிப்படையில் நாட்டை பிளவு படுத்துவதாக கூறி எதிர் கட்சிகள், பொதுமக்கள், மாணவர்கள் என இந்தியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் குடியரசு தினத்தன்று காங்கிரஸ் கட்சி நிர்வாகம், பிரதமர் நரேந்திர மோடிக்கு அரசியலமைப்புச் சட்ட புத்தகத்தை அமேசானில் ஆர்டர் செய்துள்ளது.

அத்துடன், “குடியுரிமை திருத்தச் சட்டம் அரசியலமைப்புக்கு விரோதமானது என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்!” என்று குறிப்பை இணைத்து அப்  புத்தகத்தை பரிசளித்துள்ளது.

அந்த ‘ஸ்க்ரீன் ஷாட்’டை தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அக்கட்சி, “அன்புள்ள பிரதமரே… அரசியலமைப்பு சட்ட புத்தகம் விரைவில் உங்களை வந்தடையும். நாட்டை துண்டாடுவதில் இருந்து தங்களுக்கு நேரம் கிடைக்கும்போது, அந்த புத்தகத்தை படியுங்கள்” எனவும் குறிப்பிட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் இந்தப் பதிவு, சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

ஹாட் நியூஸ்:

தேசிய கட்சியாக அங்கீகாரம் கிடைப்பது எப்படி?

இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. குஜராத்தில் பாஜக தொடர்ந்து 7-வது முறையாக ஆட்சிக்கு வரும் நிலையில், இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ்-பாஜக இடையே கடும்...

எஸ் எம் எஸ்ஸில் பூத் சிலிப் அனுப்பிய பாஜக – அதிர்ச்சியான வாக்காளர்கள்!

காந்திநகர் (05 டிச 2022): குஜராத்தில் ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் பாஜகவினர் எஸ் எம் எஸ் மூலம் பூத் சிலிப் அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். குஜராத் மாநிலத்தில் 2ம் கட்ட சட்டசபை தேர்தல் இன்று நடைபெற்று...

தீவிரமாக மாறும் மாண்டஸ் புயல்!

சென்னை (08 டிச 2022): நேற்று தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று இரவு புயலாக வலுப்பெற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில்...