உத்தரபிரதேசம் : உத்தரப் பிரதேச மாநில பரெய்லி மத்திய சிறையில் வார்யம் சிங் என்ற சீக்கிய பயங்கரவாதி, "தடா' சட்டத்தின் கீழ் கைதாகி ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். இவருடைய நன்னடத்தையைக் கருத்தில் கொண்டும், சிறையில் ஏற்கெனவே 25 வருடங்களைக் கழித்துவிட்ட காரணத்தினாலும், அவரை சிறையிலிருந்து விடுதலை செய்யுமாறு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார்.

புது டெல்லி : இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைந்து வருவதை எதிர்க்கும் விதத்தில், எழுத்தாளர்களில் பலர் சாகித்ய அகாடமி விருதுகளை தொடர்ந்து திருப்பி அளித்து வரும் சூழலை விவரித்து, "கருத்து சுதந்திரத்துக்கு ஆபத்தான சூழல் நிலவுகிறது" என்று புக்கர் பரிசு வென்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சென்னை : "தென்னிந்திய நடிகர் சங்கத்தை மூத்த நடிகர்கள் எஸ்.எஸ்.ஆர், எம்.ஜி.ஆர், சிவாஜி போன்றவர்கள் தூண்களாக இருந்து  உருவாக்கினார்கள். இப்போது அந்த நடிகர் சங்கம் பெரிய ஆபத்தில் இருக்கிறது.

சென்னை : மதுரை பைபாஸ் சாலை 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு பெற்று, ஆறு வழிச்சாலையாக உருமாற்றம் பெறுகிறது. இதற்கான பணியினை நெடுஞ்சாலைத்துறை விரைவில் துவக்கவுள்ளது. இந்தப் பணியை நேர்த்தியாக மேற்கொள்ளுமாறு நெடுஞ்சாலைத்துறைக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

புது டெல்லி : "நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணையை வரும் டிசம்பர் மாதம் 31-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும்" என சி.பி.ஐ-க்கு உச்ச நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம்(13 அக். 15): மோடி ஆர்.எஸ்.எஸ்ஸின் கட்டுப்பாட்டில் உள்ளதாக மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் தலைமை குழு உறுப்பினர் பிருந்தா காரத் மோடியை தாக்கிப் பேசியுள்ளார்.

சென்னை,(12-10-15): தமிழக முதல்வர் ஜெயலலிதாவை புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட கழக செயலாளர்கள் நேரில் சந்தித்து வாழ்த்துக்களைப் பெற்றனர்.

சென்னை : தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் கோவை, மதுரை, சேலம், திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில், 18 சிற்றுந்துகள் உட்பட 440 புதிய பேருந்துகளின் சேவையை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா இன்று கொடியசைத்துத் துவக்கி வைத்தார். இந்த பேருந்துகள் மொத்தம் 27 வழித்தடங்களில் தமது சேவையைத் தொடரும் என்று அப்போது அவர் தெரிவித்தார்.

லண்டன் : பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வெளிநாட்டு பயணமாக வருகின்ற நவம்பர் மாதம் இங்கிலாந்து செல்ல உள்ளார். அவரை வரவேற்க லண்டனில் உள்ள வெம்ப்லே மைதானத்தில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஆந்திரா :   ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் துர்கா பவானி என்ற வீராங்கனை,  விஜயவாடாவில் உள்ள தனது வீட்டில்  திடீரென தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து, விஜயவாடா காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...