திருப்பூர் :  திருப்பூர் விஜயாபுரம் பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்ற முதியவர், தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் 2 வயது பெண் குழந்தையை கோவிலுக்கு அழைத்துச்செல்வதாக கூறி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து குழந்தையின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், மகளிர் காவல்துறையினர் முதியவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஸ்காட்லாந்து: 2015- ஆம் ஆண்டின் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. நுகர்வு மற்றும் ஏழ்மை அகற்றலுக்கான ஆய்வுக் கட்டுரைகளை வழங்கியதற்காக ஸ்காட்லாந்தின் ஆங்கிஸ் டீட்டனுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. 

அமெரிக்கா: நாட்டில் நடைபெறும் ஊழல் காரணமாக சர்வதேச அளவில் ஆண்டு ஒன்றிற்கு, 2 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தி அல்லது 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பு ஏற்படுவதாக அமெரிக்காவின் நியூயார்க் மகாணத்தை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் இயற்கை வள நிர்வாக மையம் தெரிவித்துள்ளது.

சென்னை(12 அக். 15): காவிரி டெல்டா பகுதிகளில் மீத்தேன் வாயு எடுக்கத் தமிழக அரசு தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், இது தொடர்பான எந்த ஒரு ஆய்வு நடத்தவும் அனுமதியில்லை எனவும் கூறியுள்ளது.

செய்தி விரிவாக இங்கு வாசியுங்கள்

சென்னை(12 அக். 15) : புழல் சிறையில் காவலர்கள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்த பன்னா இஸ்மாயில், மதுரை மாவட்ட காவல்துறையினரால் சென்னை திருவொற்றியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று காலை 11 மணியளவில் ஆஐர்படுத்தப் பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி பன்னா இஸ்மாயிலை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.

சென்னை912 அக். 15) : "தமிழக சட்டப் பேரவை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும்" என தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான 3 பேர் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

பெங்களூர்(12 அக். 15) : தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக தொடரப்பட்ட மேல்முறையீடு மனு விசாரணை வருகின்ற நவம்பர் மாதம் 23-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் "23-ஆம் தேதிக்குள் இருதரப்புகளும் தங்களது ஆவணங்களை பரிமாறிக் கொள்ள வேண்டும்" எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நியூசிலாந்து :    நியூசிலாந்து ஹாக்கி அணிக்கு எதிராக கிறிஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்ற 3-வது போட்டியில் இந்திய ஆடவர் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.

சீனா : சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் நடந்த ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டியில் ஹாவ் சிங் சான், யுங் ஜான் சான் ஜோடியை சானியா மிர்சா - மார்டினா ஹிங்கிஸ் ஜோடி வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.

நாமக்கல் : சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த என்ஜினியரிங் பட்டதாரி கோகுல்ராஜ் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை தலைவர் யுவராஜ் நாமக்கல் மாவட்ட சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் அலுவலகத்தில் இன்று சரணடைந்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...