புது டெல்லி(அக்.7, 2015) : உத்தரப்பிரதேச மாநிலத்தில் அமலாக்கப்பட்டது போல் "நாடுமுழுவதும் பசுவதை தடைச் சட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நடைமுறைப்படுத்த வேண்டும்" என யோகா குரு பாபா ராம்தேவ் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை(7 அக். 2015): "வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் மாற்றம் வருவது உறுதி பா.ம.க ஆட்சியைப் பிடிக்கும்" என்றும், "தேர்தலில் அ.தி.மு.க, தி.மு.க கட்சிகளை தவிர பா.ம.க தலைமையை ஏற்கும் கட்சிகள் வந்து இணையலாம்" என்றும் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை(7 அக். 2015) : "தமிழகத்தில் அ.தி.மு.க, தி.மு.க தவிர இதர கட்சிகள் அனைத்தையும் வளரவிடுவதில்லை" என அவ்விரு கட்சிகளின் மீது தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த விஜயகாந்த் இவ்வாறு கூறியுள்ளார்.

பீகார்(06 அக். 2015) : "பீகார் சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெற்றால் மிருகவதைக்கு தடை விதிக்கப்படும்" என்று அம்மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவர் சுஷில் மோடி கூறியுள்ளார்.

சென்னை(06 அக். 2015) : மனித நேயக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தமீம் அன்சாரியும், இணை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து  ஹாரூன் ரஷீதும் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை : சென்னை எழும்பூரில் தமீமுன் அன்சாரி தலைமையில் நடக்கவிருந்த மனித நேய மக்கள் கட்சியின் பொதுக் குழுக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், கட்சி உடைந்து விடக் கூடாது என்பதற்காக ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் தான் கலந்து கொள்ளப்போவதாகவும் தமீமுன் அன்சாரி அறிவித்துள்ளார்.

சென்னை: இந்திய மொழிகளில் சிறந்த இலக்கிய நூல்களுக்கு "சமன்வாய் பாஷா சம்மன்" என்னும் உயரிய விருது வழங்கப்பட்டு வருகிறது.

சென்னை(05/10/2015) : தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் நடத்தி வரும் "நமக்கு நாமே பயணத்தால் எந்த பிரயோஜனமும் இல்லை; அது ஒரு காமெடி டைம்" என்று நேற்றிரவு சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மு.க.அழகிரி தெரிவித்து உள்ளார்.

சென்னை(05/10/2015) : "நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசிக்காமல் வை.கோ தன்னிச்சையாக முடிவு எடுக்கிறார்" என்று ம.தி.மு.க-வை விட்டு விலகிய அக்கட்சியின் மாநில பொருளாளர் மாசிலாமணி குற்றஞ்சாட்டி உள்ளார்.

புதுடெல்லி: ஹஜ் விபத்தில் காணமல் போன இந்தியர்கள் பட்டியல் நீண்டுகொண்டிருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...