மத்தியப் பிரதேசத்தில் நிகழ்ந்த வெடி விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 90ஆக அதிகரித்துள்ளது.

யமனில் சவூதி கூட்டுப்படை தாக்குதலில் 20 இந்தியர்கள் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை : தமிழகத்தில் ஒரு சில இடங்களில் 2 நாட்கள் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இலங்கை : இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மூன்று நாள் பயணமாக இந்தியா வரவுள்ளார்.

சென்னை : சென்னை வந்த விமானத்தில் கேட்பாரற்று கிடந்த 1.6 கிலோ தங்க நகைகளை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

புதுடெல்லி : 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய தொலை தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா சி.பி.ஐ நீதிமன்றத்தில் ஆஜரானார்.

ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட அ.தி.மு.க நிர்வாகி உள்பட இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

புதுடெல்லி: "பாலியல் வன்கொடுமை தொடர்பான காணொளிக்களை இணையதளத்தில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி இத்தாலி நாட்டு சரக்குக் கப்பலில் இருந்த கடற்படை வீரர்கள் கேரள கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 2 இந்திய மீனவர்களை சுட்டுக்கொன்றனர்.

நாளை தொடங்க உள்ள சட்டபேரவை கூட்டத் தொடரில் தே.மு.தி.க. உறுப்பினர்களும் முழுமையான அளவில் பங்கேற்கும் வகையில், அவர்கள் மீதான தண்டனையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி கேட்டு கொண்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...