ஹிஜாப் விவகாரம் – மாணவிகள் கல்லூரியிலிருந்து இடை நீக்கம்?

பெங்களூரு (19 பிப் 2022): ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடகா கல்லூரியிலிருந்து 58 மாணவிகள் இடைநீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் கல்லூரி முதல்வர் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

ஷிவமோகா மாவட்டத்தில் ஹிஜாப் கட்டுப்பாடுகளுக்கு எதிராக போராட்டம் நடத்திய கர்நாடகா கல்லூரி மாணவர்கள் 58 பேர் இடைநீக்கம் செய்யப்பட்ட செய்தி இணையத்தில் வெளியானது.

கல்லூரி விதிகளை மீறியதால் கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதாக முதல்வர் மாணவர்களிடம் கூறிய வீடியோக்கள் ஆன்லைனில் வெளிவந்தன.

“துணை எஸ்பி உள்ளிட்டோர் மாணவிகளை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் அவர்கள் சொல்வதை நீங்கள் கேட்கவில்லை. விதிகளை மீறினீர்கள். அதனால்தான் உங்கள் அனைவரையும் கல்லூரியில் இருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்கிறோம். அதிலிருந்து நீங்கள் வளாகத்திற்குள் நுழைய முடியாது. நீங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டீர்கள்,” என்று முதல்வர் கூறும் வீடியோ இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் ஷிவமோகா டிசி இதுகுறித்து கூறுகையில், முதல்வர் வெறுமனே மாணவர்களை அச்சுறுத்துவதற்காக வாய்மொழியாக அவ்வாறு உத்தரவு பிறப்பித்தார். இடைநீக்க உத்தரவு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்று கூறினார்.

ஹாட் நியூஸ்:

சவூதியில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு!

ரியாத் (28 ஜன 2023): சவுதி அரேபியாவில், எதிர்வரும் நாட்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. காலநிலை மாற்றத்தின் விளைவாக, சவூதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளில் குளிர் நிலவும்...

குவைத்தில் கூகுள் பே சேவை!

குவைத் (25 ஜன 2023) குவைத்தில் கூகுள் பே சேவை தொடங்கப்படவுள்ளது. குவைத் மத்திய வங்கியின் தேவையான ஆய்வுகள் முடிந்த பிறகு நாட்டில் கூகுள் பே சேவை தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். நாட்டின்...

குவைத்தில் நீடிக்கும் கடும் குளிர்!

குவைத் (25 ஜன 2023): குவைத்தில் கடும் குளிர் நீடிக்கிறது. பல இடங்களில் வெப்பநிலை பூஜ்ஜிய டிகிரி செல்சியஸை எட்டியுள்ளது. குவைத் முழுவதும் கடும் குளிர் நிலவத் தொடங்கியது. இரவுகளில், பாலைவனப் பகுதிகளில் காற்றின்...