இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 414 ஆக உயர்வு!

394

புதுடெல்லி (16 ஏப் 2020): இந்தியாவில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 414 ஆக உயர்ந்துள்ளது.

உலக நாடுகளில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவில் தீவிரமடைந்துள்ளது. இதனை முன்னிட்டு கடந்த மார்ச் 24ந்தேதியில் இருந்து அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை அடுத்து கடந்த 14ந்தேதி அடுத்த 19 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இதைப் படிச்சீங்களா?:  ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளை மாற்ற முடியுமா? - திக் விஜய் சிங் சரமாரி கேள்வி!

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12,380 ஆக இன்று உயர்ந்து உள்ளது. பலி எண்ணிக்கை 414 ஆக உயர்ந்து உள்ளது. 10,477 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 1,489 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர் என மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் தெரிவித்துள்ளது.