கொரோனா பாதிப்பில் சீனாவை முந்திய இந்தியா!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 85,940 ஆக அதிகரித்துள்ளது. இது சீனாவை விட அதிகமாகும்.

கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்‍கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியா முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்‍கப்பட்டுள்ளோர் எண்ணிக்‍கை 85 ஆயிரத்து 940 -ஆக அதிகரித்துள்ளது. பலியானோர் எண்ணிக்‍கை 2 ஆயிரத்து 753-ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 30 ஆயிரத்து 258 பேர் குணம‌‌டைந்துள்ளனர்.

நாட்டிலேயே அதிகபட்சமாக மஹாராஷ்ட்ராவில் 29 ஆயிரத்து 100 பேர் கொரோனா வைரசால் பாதிக்‍கப்பட்டுள்ளனர். இதுவரை ஆயிரத்து 68 பேர் உயிரிழந்தனர்.

கொரோனா தொற்று ஏற்பட்ட சீனாவில் 82,929 பேர் மட்டுமே பாதிக்‍கப்பட்டிருந்த நிலையில், இந்தியா கொரோனா பாதிப்பில் சீனாவை முந்தியுள்ளது.

ஹாட் நியூஸ்:

13 வயது மாணவியை கர்ப்பமாக்கிய வளர்ப்புத் தந்தை!

கோவை (27 ஜன 2023): 13 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய, வளர்ப்பு தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர். கோவையை சேர்ந்த 13 வயது மாணவி, அங்குள்ள ஒரு பள்ளியில் 7-ம்...

முஹம்மது நபியை இழிவு படுத்தியவர்களுக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்!

போபால் (30 ஜன 2023): முஹம்மது நபியை இழிவு படுத்தும் வகையில் கோஷம் எழுப்பியவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜனவரி 25 ஆம் தேதி அன்று ஷாருக்கான்...

முஸ்லிம் தோற்றத்தில் எம்பி தமிழச்சி தங்கபாண்டியன்!

மஸ்கட் (28 ஜன 2023): திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்க பாண்டியன் ஓமன் மசூதிக்குச் சென்று அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படத்தைத் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் பல்வேறு...