இந்தியாவில் 15 நாட்களில் 110 பேர் கொரோனாவால் பாதிப்பு!

Share this News:

புதுடெல்லி (16 மார்ச் 2020): கொரோனா வைரஸ் இந்தியாவில் அதிகரித்து வருகின்றன. அரசாங்க புள்ளிவிவரங்களின்படி, நாட்டில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 110 ஆக உயர்ந்துள்ளது.

சீனாவில் தொடங்கி உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் அதிக அளவில் மிரட்டி வருகிறது. தற்போதைய நிலவரப்படி 110 பேர் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 93 நோயாளிகள் இந்தியர்கள், 17 பேர் வெளிநாட்டினர். இதில் 13 பேர் சிகிச்சையின் பின்னர் குணமடைந்து வீட்டுக்குச் சென்றுள்ளனர். இரண்டு பேர் இறந்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் (Maharashtra) கொரோனா வேகமாக பரவுகிறது. இதுவரை 32 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்து கேரளாவில் 22 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸால் வெளிநாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதும் நடந்து வருகிறது. இத்தாலியில் இருந்து 218 இந்திய சிறப்பு விமானங்கள் இத்தாலியில் சிக்கித் தவிக்கும் 218 இந்திய பிரஜைகள் டெல்லிக்கு கொண்டு வரப்பட்டனர். அனைவரும் தற்போது டெல்லியின் சாவ்லா பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை, 267 இந்தியர்கள் இத்தாலியில் இருந்து இந்தியா வந்துள்ளனர். அதே நேரத்தில், ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் இருந்து 236 இந்தியர்களும் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர், அதன் பிறகு இந்த இந்தியர்கள் ஜெய்சால்மரில் உள்ள தனிமை மையத்திற்கு அனுப்பப்பட்டனர்.


Share this News:

Leave a Reply