இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கு குற்றவாளிகள் விடுவிப்பு!

Share this News:

அகமதாபாத் (31 மார்ச் 2021): இஷ்ரத் ஜஹான் போலி என்கவுன்டர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று போலீஸ்காரர்களை அலகாபாத் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது. ஏற்கனவே இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேர் விடுவிக்கப்பட்டனர்.

சிறப்பு சிபிஐ நீதிபதி வி.ஆர்.ராவல், போலீஸ் அதிகாரிகளான ஜி.எல். சிம் கால், தருண் பரோத் மற்றும் அனாஜு சவுத்ரி ஆகியோரை விடுவித்தார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரிக்க குஜராத் அரசு அனுமதி மறுத்து வருவதாக மார்ச் 20 அன்று சிபிஐ நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

ஜூன் 2004 இல் அகமதாபாத்தில் நடந்த போலி என்கவுண்டரில் இஷ்ரத் ஜஹான் மற்றும் மூன்று பேர் கொல்லப்பட்டனர். நரேந்திர மோடியை படுகொலை செய்யும் திட்டத்தை கொண்டிருந்ததாக அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் அவர்கள் என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்டனர்.

இருப்பினும், உயர்நீதிமன்றத்தின் சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) இந்த சம்பவம் ஒரு போலி என்கவுண்டர் என்று கண்டறிந்தது. பின்னர் இந்த வழக்கு சிபிஐவிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply