லவ் ஜிஹாத் விவகாரம் – யோகி அரசுக்கு அலகாபாத் நீதிமன்றம் குட்டு!

Share this News:

லக்னோ (24 நவ 2020): வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் மனித உரிமையில் அரசு தலையிட முடியாது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

லவ் ஜிஹாத் குற்றச்சாட்டுக்கு எதிராக சல்மத் அன்சாரி மற்றும் பிரியங்கா ஆகியோர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது.

இருவேறு மதத்தினர் திருமணம் செய்து கொள்வதை லவ் ஜிஹாத் என்ற பெயரில் திசை திரும்பும் வேலையை பாஜக தலைமையிலான உபி அரசு செய்து வருகிறது. திருமணத்திற்காக மதம் மாறுவதையும் உபி அரசு கடுமையாக எதிர்த்து வருகிறது.

இந்நிலையில் சல்மத் அன்சாரி மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு எதிராக பிரியங்காவின் தந்தை அளித்த புகாருக்கு எதிராக சல்மத் அன்சாரி மற்றும் பிரியங்கா தம்பதியினர் அளித்த மனுவை விசாரித்த நீதிமன்றம்., சல்மத் அன்சாரி மற்றும் பிரியங்கா இருவரும் பெரியவர்கள். இவர்கள் ஒன்றாக வாழ சட்டப்பூர்வ உரிமை உண்டு . இவர்களின் உரிமைகளில் அரசாங்கமோ மற்றவர்களோ தலையிட முடியாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

உத்தரபிரதேச அரசின் ஜிஹாத் சட்டத்திற்கு எதிராக கருத்தை சுட்டிக் காட்டிய நீதிமன்றம். மதம் மாறி செய்து கொண்ட திருமணத்தை தடை செய்வது சரியான சட்டம் அல்ல. தனிநபர்களின் உரிமைகளில் அரசாங்கம் தலையிட முடியாது என்றும் அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஏற்கனவே உ.பியில் நடந்த கலப்புத் திருமணங்கள் லவ் ஜிஹாத் அல்ல என்று 14 கலப்பு திருமணங்கள் தொடர்பான விசாரணை அறிக்கையில் இதற்காக நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) கான்பூர் ஐ.ஜி.க்கு அறிக்கை சமர்ப்பித்தது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply