இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!

417

புதுடெல்லி (21 பிப் 2021): இந்தியாவில் கொரோனாவின் கொடூரம் சமீப காலமாக குறைந்து வந்தது ஆனால் தற்போது கடந்த சில தினங்களாக புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை சற்று அதிகரித்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,264 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,09,91,651 ஆக அதிகரித்துள்ளது.

இதைப் படிச்சீங்களா?:  சிஏஏ மற்றும் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் - ஸ்டாலின் அதிரடி!

இந்தியாவில் இன்று ஒரே நாளில் 11,667 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,06,89,715 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு 1,45,634 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 90 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,56,302 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.