22 மாவட்டங்களில் கொரோனா தொற்று திடீர் அதிகரிப்பு!

590

புதுடெல்லி (28 ஜூலை 2021): இந்தியாவில் 7 மாநிலங்களில் உள்ள 22 மாவட்டங்களில் கொரோனா தொற்று சற்று அதிகரித்து காணப்படுகிறது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் செய்தியாளர்களிடம் பேசும்போது, “நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு 132 நாட்களுக்கு பிறகு 30 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது… அதேசமயம் 22 மாவட்டங்களில் மட்டும் கொரோனா தினசரி பாதிப்பு 100க்கும் கீழ் பதிவாகியுள்ளது.. இதில் 7 மாநிலங்களில் உள்ள 22 மாவட்டங்களில் கொரோனா தொற்று சற்று அதிகரித்து காணப்படுகிறது.

கேரளாவை பொறுத்தவரை 7 மாவட்டங்களில் கொரோனா தொற்று உயர்ந்துள்ளது… ஆலப்புழா, கோட்டயம், மலப்புறம், திருச்சூர், வயநாடு, எர்ணாகுளம், பத்தனம்திட்டா ஆகிய ஏழு மாவட்டங்களில் கொரோனா பாதிப்புகள் அதிகமாகவே காணப்படுகிறது.. கேரளத்தில் பத்து மாவட்டங்களில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 10 சதவீதமாக உள்ளது..

இதைப் படிச்சீங்களா?:  பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்ற பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்!

கொரோனா குணமடைந்தோர் விகிதம் 97% ஆக உயர்ந்த நிலையிலும் தற்போது கொரோனா பரவல் என்பது சற்று அதிகரித்தே காணப்படுகிறது. கொரோனா அதிகரித்துவருவதால் மாநில அரசுடன் இதுகுறித்து விவாதித்துள்ளன.. கொரோனா அதிகரித்துவரும் மாவட்டங்களில் எக்காரணத்தை கொண்டும் தளர்வுகள் ஏற்படுத்தக்கூடாது” என்றார்.