இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்பு!

232

புதுடெல்லி (10 ஜூலை 2021): இந்தியாவில் கொரோனா உயிரிழப்புகள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் அச்சமும் கலக்கமும் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 42 ஆயிரத்து 766 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், நாட்டில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 7 லட்சத்து 95 ஆயிரத்து 716 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப் பட்டவர்களில் 4 லட்சத்து 55 ஆயிரத்து 33 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் 45 ஆயிரத்து 254 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதைப் படிச்சீங்களா?:  சீனாவை மீண்டும் மிரட்டும் புதிய வகை கொரோனா வைரஸ்!

இதனால், நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 99 லட்சத்து 33 ஆயிரத்து 538 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா கொடும் தாக்குதலுக்கு 1,206 பேர் உயிர் இழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 7 ஆயிரத்து 145 ஆக அதிகரித்துள்ளது.