இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்பு!

Share this News:

புதுடெல்லி (19 ஆக 2021): இந்தியாவில் நேற்று கொரோனா உயிரிழப்பு நேற்று முன் தினத்தை விட சற்று அதிகரித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று (19.08.2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியாவின் மொத்த கொரோனா தொற்று பாதிப்பு 3,23,22,258 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரேநாளில் இந்தியா முழுவதும் 36,401 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று ஒரேநாளில் 39,157 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தனர். இதனால் ஒட்டுமொத்தமாக இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 3,15,25,080 ஆக உயர்ந்துள்ளது.
இதனால் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 97.51 சதவீதமாக இருக்கிறது.

அதேபோல் உயிரிழப்பு விகிதம் 1.34 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் நேற்று முன்தினம் ஒரேநாளில் 440 பேர் உயிரிழந்த நிலையில், நேற்று உயிரிழப்பு சற்று அதிகரித்து ஒரேநாளில் 530 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால், இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,33,049 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவிற்கு 3,64,129 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இந்தியாவில் நேற்று ஒரேநாளில் 56,36,336 கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனால் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை 56.64 கோடியாக உள்ளது. அதேபோல் தமிழ்நாட்டில் இதுவரை 2,76,46,321 கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.


Share this News:

Leave a Reply