இருதய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்த கொரோனா நோயாளி!

Share this News:

ஐதராபாத் (22 ஜூலை 2020): கொரோனா வைரஸிலிருந்து மீண்ட 63 வயதான அஃப்சர்கானுக்கு இருதய அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளனர்.

ஐதராபாத்தின் பஞ்சாரா ஹில்ஸ், பராமரிப்பு மருத்துவமனையின் இருதய அறுவை சிகிச்சை மற்றும் தலைமை இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரதீக் பட்நகர், இந்தியாவின் கொரோனா பாதித்து மீண்ட நோயாளிக்கு முதல் இருதய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளார்.

சிகிச்சை அளிக்கப்பட்ட நோயாளி அஃப்சர்கான், பல நாட்களாக நெஞ்சு வலியால் அவதி பட்டு வந்துள்ளார். இந்நிலையில்தான் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு செய்ய வேண்டிய இருதய அறுவை சிகிச்சை தள்ளி வைக்கப்பட்டது.

இதனை அடுத்து கடந்த ஏப்ரல் இறுதியில் அவர் கொரோனாவிலிருந்து மீண்டார். இந்நிலையில் கடந்த ஜூலை 16 ஆம் தேதி அவருக்கு இருதய அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவரது உடல் நல்ல நிலையில் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


Share this News:

Leave a Reply