கொரோனா தடுப்பூசியால் ஏற்படும் பக்க விளைவுகளுக்கு பொறுப்பேற்க முடியாது – மத்திய அரசு பின்வாங்கல்!

865

புதுடில்லி (14 ஜன 2021): கோவிட் 19 தடுப்பூசியால் ஏற்படும் எந்தவொரு பக்க விளைவுகளுக்கும் தடுப்பூசி தயாரிப்பாளர்கள் மட்டுமே சட்டப்படி பொறுப்பாவார்கள் என்றும் மத்திய அரசு பொறுப்பேற்க முடியாது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கோவிட் 19 தடுப்பூசியால் ஏற்படும் பக்கவிளைவுகளுக்கு அரசாங்கமும் பொறுப்பேற்க வேண்டும் என்று தடுப்பூசி உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்திருந்த நிலையில் அவர்களது கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது.

கோவிட் தடுப்பூசி குறுகிய காலத்தில் உருவாக்கப்பட்டது, எனவே அதன் பக்கவிளைவுகளுக்கு அரசாங்கமு ம் பொறுப்பேற்க வேண்டும் என்தடுப்பூசி தயாரிப்பாளர்கள் விரும்பினர். அமெரிக்கா, பிரிட்டன், கனடா, சிங்கப்பூர் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகள் தடுப்பூசி நிறுவனங்களுடன் சட்டபூர்வமான கடமைகளைப் பகிர்ந்து கொள்கின்றன இதையே மருந்து நிறுவனங்களும் வலியுறுத்தின.

இதைப் படிச்சீங்களா?:  தேர்தல் ஆணையத்திற்கு மோடி ஆணையம் என பெயர் வைக்கலாம் - மம்தா சாடல்!

அதேவேளை கோவிட் தடுப்பூசிக்கு பிற நோய்த்தடுப்பு மருந்துகளுக்கான சட்ட விதிகளே பொருந்தும் என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. பக்க விளைவுகள் ஏற்பட்டால், மருந்துகள் மற்றும் அழகுசாதன சட்டம் மற்றும் மத்திய மருந்துகள் தர நிர்ணய அமைப்பு கொள்கைகளின் கீழ் நிறுவனங்கள் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடலாம் .