தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் உயர் ஜாதியினரால் அடித்துக் கொலை!

811

ஃபிரோசாபாத் (26 ஏப் 2022): உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத் மாவட்டத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கால்நடைகளுக்கு தீவனம் கொடுத்துக் கொண்டிருந்தபோது, ​​உயர் சாதியைச் சேர்ந்த சிலர் தாக்கியுள்ளனர்.

இதில் தலையில் பலத்த காயமடைந்த ஜெய் சிங் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அகிலேஷ் நரேன் கூறுகையில், இந்த சம்பவ தொடர்பாக 6 பேர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்றார்.

நிலத்தகராறில் இந்த கொலை நடந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து இறந்தவரின் மகள் சோனம் கூறுகையில்,”உயர் ஜாதியினர் எங்கள் நிலத்தை அபகரிக்க முயன்றனர். நிலத்தை காலி செய்யாவிட்டால், என் தந்தையை கொன்று விடுவதாக மிரட்டினர். இந்த சம்பவம் குறித்து நாங்கள் காவல்துறையிடம் தெரிவித்திருந்தோம், ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, ”என்று கூறினார்.