அஹமதாபாத் குண்டுவெடிப்பு வழக்கில் 38 பேருக்கு தூக்குத் தண்டனை!

Share this News:

அஹமதாபாத் (18 பிப் 2022): அஹமதாபாத் குண்டுவெடிப்பு வழக்கில் 38 பேருக்கு தூக்குத் தண்டனை வழங்கி அஹமதாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2008 ம் ஆண்டு, குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 56 பேர் பலியானார்கள், 200 பேர் காயமடைந்தனர்.

இந்தத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 49 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டிருந்தனர். அதில், 38 பேருக்கு தூக்கு தண்டனையும், மீதமுளள 11 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து அஹமதாபாத் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

முன்னதாக இந்த குண்டுவெடிப்பு பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், இந்தியன் முஜாஹிதீன் அமைப்புக்கு தொடர்பிருப்பதாக அறிவித்தது. இது தொடர்பாக காவல்துறையினர் 85 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை அஹமதாபாத் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. 1,100க்கும் அதிகமானோர் சாட்சியம் அளித்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் இரு தரப்பு விசாரணைகளும் கடந்த செப்டம்பர் மாதம் முடிவடைந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப் பட்டது

இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஏ.ஆர்.படேல், 49 பேரை குற்றவாளிகளாக அறிவித்தார். 28 பேர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி அவர்களை விடுதலை செய்தும் உத்தரவிட்டார்.

49 குற்றவாளிகளில் 38 பேருக்கு தூக்கு தண்டனையும், மீதமுளள 11 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.


Share this News:

Leave a Reply